Thursday, 6 April 2017

என் சமையலறையில் : அவளும் அவனும்

என் சமையலறையில் : அவளும் அவனும்: அவளுக்கும் அவனுக்கும் ஆன ஊடல் என்பது. தாய்க்கும் பிள்ளைக்கும் ஆனது போல. இருவருக்கும் வேறு ஒருவரால் சமாதானம் கிடைக்காது என்று  தெரிந்...

Tuesday, 15 March 2016

அவளும் அவனும்

அவளுக்கும் அவனுக்கும் ஆன ஊடல் என்பது.
தாய்க்கும் பிள்ளைக்கும் ஆனது போல.
இருவருக்கும் வேறு ஒருவரால் சமாதானம் கிடைக்காது
என்று  தெரிந்தாலும் கூட விட்டுக்கொடுத்துக்கொள்வதில்லை…

000

பண்டிகை நாளுக்கு ஏங்கும் 
சிறுபிள்ளை போலானது 
 உனக்கான என் காத்திருப்பு…
000
யாரலும் நீ ஆகிவிட முடியாது…
ஏன் உன்னால் கூட
நான் காதலித்த நீ ஆக முடியவில்லயே….

000

எல்லோரிலும் உன்னை தேடும் பழக்கம்
எப்போதிருந்து வந்தது என்று தெரியவில்லை …….
ஆனால் நீ விட்டுச்சென்ற மிச்சத்தை
எடுத்துப்போக என்றேனும் நீ வருவாய் என 
தோன்றிக்கொண்டே இருக்கிறது…..

ooo

தொடர்பற்ற சங்கிலிகளாய் 
 நம் பேச்சுக்கள் அறுந்து விழுந்துகோண்டே போக
நீ உன் விழிகளால் 
அவற்றை  நமோடு கோர்த்துக்கொண்டே வந்தாய்…..
முடிவில்லாமல் நம் கண்கள் மட்டும் பேசிக்கோண்டே இருந்தது…..

000

பெண்டுலம் போல அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மனது
நீண்ட எண்ணங்களினால் ஆன உன் நினைவுகளின் முடிவில் என் காதல்.

000

நீ அழகான பொய்கள் சொல்லி
என்னை கவர்வதில்லை, மாறாக
உன் உண்மையான கிண்டல்களே
 என்னை அதிகம் வெட்க்கப்பட வைக்கின்றன….

000

அவனாகவும் அவளாகவும் இருந்தவர்கள், 
அவனுடய அவளாகவும் , 
 அவளுடய அவனாகவும் 
மாறியிருந்த தருனமது. 
அவள் கால் விரல்களில் முத்தமிட்டு
மொட்டவிழ்த்துக்கொண்டே அவன் கேட்டான்.
“டீ உனக்கு என்ன ஏன் பிடிக்கும்?”
விசுக்கென காலை பின்னுக்கு இழுத்து , 
கழுத்தில் மாலையிட்டு,
மார்பு வியர்வையில் முத்தமிட்டு சொன்னாள்
 ”ஏன்னா….. எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்”

000

இந்த தூரம் கொல்கிறது எனை…..
உன் அழைப்பிற்காக ஏங்கி ஏங்கி 
ஒவ்வொரு முறையும் என் அலைபேசியை பார்க்கும் போதும்
ஏமாற்றிய குற்றவுணர்ச்சியில் என் அலைபேசி   மௌனிக்கிறது…
0000
காபியின் சுவையை
 காதலியின் கன்னத்தில் கடத்தத்தெறிந்தவனே
ஆகச்சிறந்த காதலன் ஆகிறான்

0000

Wednesday, 23 September 2015

அப்பா

சிறுவயதில் என்னை
தூக்கிக் கொஞ்சும் பொழுது
மீசைக்குத்தி நான் அழுததிலிருந்து
என்னை முத்தமிட்டதே இல்லையாம் அப்பா
இன்று அம்மா
"இந்த  வரனைப்பரு "
என்று காட்டிய புகைப்படத்தை பார்த்து
"என்னப்பா இது மாப்பிள்ளைக்கு
மீசையே இல்ல !?"
என்றேன் .....
அம்மா அப்பாவை பார்த்து
சூசகமாய் சிரித்ததையும்
அப்பா விழித்ததையும்
கவனிக்க தவறவில்லை நான்....:)

மழைத்தேநீர் பிரியர்கள்

இந்நேரம் நீயும்
அந்த நிலவை பார்த்துக்கொண்டிருப்பாய்.....
00
என்னைப்போலவே
கையில் தேநீர் கோப்பையுடன்
00
நானுனக்கு பரிசளித்த
தேநீர்க்கோப்பையாய் இருக்க
அதிகபச்ச  வாய்ப்பிருக்கிறது
00
அனேகமாக என்னை நினைத்து
சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்
00
உன்னை சுற்றி  அனைத்தும்
என்னை ஞாபகப்படுத்தும் போது
உன்னால் என்ன செய்ய முடியும் பாவம்
00
நான் உன்னிடம் விட்டுச்சென்ற
என் உதடிற்கு நீ  தேநீர்
ஒத்தடம் தருவதை என்னால்
உணர முடிகிறது
00
நீ ஒவ்வொரு முறை
அருந்தும்போதும் ஒரு
நட்சத்திரம் இங்கே பூக்கிறது
00
அதை எண்ணிக்கொண்டே
என் தேநீரை எடுக்கையில் அதில்
ஒரு மழை துளி
விழுகிறது
00
என் இல்லாமையில்  என்
இருப்பை உணர்ந்து நீ
சிந்தும் கண்ணீர் என்றுணர்ந்து
அதில் வேறொரு மழை நீர்
விழாமல் பத்திரமாய்
உள்ளெடுத்து வந்து
பருகுகிறேன் ......
00
நீயும் அதையே தான் செய்கிறாய்.....
00
அன்று முதல் நாம்
மழைத்தேநீர் பிரியர்கள் ஆனோம்...

Wednesday, 15 April 2015

சலிக்காத நாடகம்

எப்பொழுதும் சண்டையிலே முடியும் நம் உரையாடல்கள் ..
அசைபோட்டுப்பார்கின்றேன் அந்த நாடகங்களை
என் கைகளை இருகப்பற்றிகொண்டு பேச ஆரம்பிப்பாய்
ஒரு கையால் நம் கை மேல் கோலம் போட்டுக்கொண்டே
எதிலோ ஆரம்பித்து ஏதோ ஒரு தருணத்தில் சண்டையில் வந்து நிற்கும்.
சண்டையின் ஆரம்பத்தை உன் கைவிரல்களின் இருக்கம் குறைவதினாலோஅல்லது என் கைகளை நான் விடுவிக்க முயல்வதினாலோ உணர்ந்துகொள்வோம்.
நீ ஏன் அப்டி பேசின என்று நானும்
சண்டைக்கு தயாரா நிப்பியா? என்ன பேசினாலும் பிரச்சன பண்ண எப்டி தான் இந்த பொண்ணுங்களால முடியுதோ? என்று நீயம்
என்ன சொன்ன?? என்ன பத்தி பேசினா என்ன பத்தி மட்டும் பேசு ….
சும்மா பொண்ணுங்க கின்னுங்க நு பொதுப்படையா பேசாத….
உடனே வந்துடுவீங்களே போர் கொடி தூக்கிட்டு. சை
ஆமா உன்ன மாதிரி ஆணாதிக்க வாதிகளிடம் போர் கொடி பிடிக்காம வேற என்ன செய்றது. male chauvinist
ஆமாம்மா நாங்கலாம் male chauvinist  தான்.. இப்டி ஒரு male chauvinist  கூட ஏன் இருக்க? போக வேண்டியது தான.
அவ்வளவுதான். கண்களில் கோபம் பொங்க உன்னை பார்பேன்…. உன் பிடியில் இருந்து ஒவொரு விரல்களாய் பிரிந்து இப்பொழுது என் கை முழுதாய் விடுபடிருக்கும்.
கண்களில் குளம் கட்ட ஆரம்பிப்பதை நீ கவனித்ததும். அதில்ல அம்மு…. என்று மீண்டும் கைகளை இழுத்து உன் கன்னங்களில் வைத்துக்கொள்வாய்.நான் வேகமாக பின்னுக்கு இழுக்க முயற்சிப்பேன்.
ஒரு முறை இப்படி செய்யும் போது நான்  முரண்டு பிடித்து கண்ணாடி வளையல்கள் உடைந்து கைகளை கீறி அதற்கு அடுத்த சண்டை ஆரம்பித்ததில் இருந்து அவ்வளவு அடம்பிடிப்பதில்லை…
கடைசியில் கைகளை கன்னத்தில் இருந்து எடுத்து ஒவொரு விரல்களாய் முத்தமிட்டு. என் முகத்தை கைகளில் ஏந்தி sorry டா மன்னிச்சுடு என்று (தவறு என் பக்கமே இருந்தாலும்) மன்னிப்பு கேட்டு கைகோர்த்து நடக்கும் போது முடியும் அந்த நாடகம்…
திரும்பத்திரும்ப அரங்கேறினாலும் சலிக்காத நாடகம்.

Wednesday, 30 April 2014

எங்கிருக்கிறாய் நீ

எங்கிருக்கிறாய் நீ
எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

தாயாய் தோழியாய்

மனைவியாய் குழந்தையாய் - உனக்கு

நான் இருக்க விழைகிறேன்

எனவே சொல்

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ

சின்ன சின்னதாய் கதை பேச...

கோபம் கொண்டு சிணுங்க...

திகட்ட திகட்ட காதல் செய்ய...

உன் அழுக்கு சட்டையை

துவைக்கும் பொழுது

திட்டி கொண்டே உன்னை கொஞ்ச...

நேரம் தாண்டி வரும் பொழுது

வாசல் மறித்து மணி காட்ட....

உனக்கு பிடித்த சமையலுடன்

உன் வருகைக்காக காத்திருக்க....

வாகனத்தின் பின் கட்டில்

மலராய் நான் அமர

புயலாய் நீ செலுத்த....

அவ்வழகில் நான் அசர

இப்படியே ஆயிரம் ஆயிரம்

ஆசைகள் என்னுள் ......

எனவே சொல் காதலனே

எனக்காக பிறந்தவனே

எங்கிருக்கிறாய் நீ !????

அலைபேசி

உன்னிடம் பேச வேண்டும் என்றே

ஒவ்வொரு முறையும்

அலை பேசியை எடுக்கின்றேன்

ஆனால் நான் பேசுவது என்னவோ

அலைபேசியை அணைத்த பின்பு தான்