Tuesday, 15 March 2016

அவளும் அவனும்

அவளுக்கும் அவனுக்கும் ஆன ஊடல் என்பது.
தாய்க்கும் பிள்ளைக்கும் ஆனது போல.
இருவருக்கும் வேறு ஒருவரால் சமாதானம் கிடைக்காது
என்று  தெரிந்தாலும் கூட விட்டுக்கொடுத்துக்கொள்வதில்லை…

000

பண்டிகை நாளுக்கு ஏங்கும் 
சிறுபிள்ளை போலானது 
 உனக்கான என் காத்திருப்பு…
000
யாரலும் நீ ஆகிவிட முடியாது…
ஏன் உன்னால் கூட
நான் காதலித்த நீ ஆக முடியவில்லயே….

000

எல்லோரிலும் உன்னை தேடும் பழக்கம்
எப்போதிருந்து வந்தது என்று தெரியவில்லை …….
ஆனால் நீ விட்டுச்சென்ற மிச்சத்தை
எடுத்துப்போக என்றேனும் நீ வருவாய் என 
தோன்றிக்கொண்டே இருக்கிறது…..

ooo

தொடர்பற்ற சங்கிலிகளாய் 
 நம் பேச்சுக்கள் அறுந்து விழுந்துகோண்டே போக
நீ உன் விழிகளால் 
அவற்றை  நமோடு கோர்த்துக்கொண்டே வந்தாய்…..
முடிவில்லாமல் நம் கண்கள் மட்டும் பேசிக்கோண்டே இருந்தது…..

000

பெண்டுலம் போல அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது மனது
நீண்ட எண்ணங்களினால் ஆன உன் நினைவுகளின் முடிவில் என் காதல்.

000

நீ அழகான பொய்கள் சொல்லி
என்னை கவர்வதில்லை, மாறாக
உன் உண்மையான கிண்டல்களே
 என்னை அதிகம் வெட்க்கப்பட வைக்கின்றன….

000

அவனாகவும் அவளாகவும் இருந்தவர்கள், 
அவனுடய அவளாகவும் , 
 அவளுடய அவனாகவும் 
மாறியிருந்த தருனமது. 
அவள் கால் விரல்களில் முத்தமிட்டு
மொட்டவிழ்த்துக்கொண்டே அவன் கேட்டான்.
“டீ உனக்கு என்ன ஏன் பிடிக்கும்?”
விசுக்கென காலை பின்னுக்கு இழுத்து , 
கழுத்தில் மாலையிட்டு,
மார்பு வியர்வையில் முத்தமிட்டு சொன்னாள்
 ”ஏன்னா….. எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்”

000

இந்த தூரம் கொல்கிறது எனை…..
உன் அழைப்பிற்காக ஏங்கி ஏங்கி 
ஒவ்வொரு முறையும் என் அலைபேசியை பார்க்கும் போதும்
ஏமாற்றிய குற்றவுணர்ச்சியில் என் அலைபேசி   மௌனிக்கிறது…
0000
காபியின் சுவையை
 காதலியின் கன்னத்தில் கடத்தத்தெறிந்தவனே
ஆகச்சிறந்த காதலன் ஆகிறான்

0000