Wednesday, 15 April 2015

சலிக்காத நாடகம்

எப்பொழுதும் சண்டையிலே முடியும் நம் உரையாடல்கள் ..
அசைபோட்டுப்பார்கின்றேன் அந்த நாடகங்களை
என் கைகளை இருகப்பற்றிகொண்டு பேச ஆரம்பிப்பாய்
ஒரு கையால் நம் கை மேல் கோலம் போட்டுக்கொண்டே
எதிலோ ஆரம்பித்து ஏதோ ஒரு தருணத்தில் சண்டையில் வந்து நிற்கும்.
சண்டையின் ஆரம்பத்தை உன் கைவிரல்களின் இருக்கம் குறைவதினாலோஅல்லது என் கைகளை நான் விடுவிக்க முயல்வதினாலோ உணர்ந்துகொள்வோம்.
நீ ஏன் அப்டி பேசின என்று நானும்
சண்டைக்கு தயாரா நிப்பியா? என்ன பேசினாலும் பிரச்சன பண்ண எப்டி தான் இந்த பொண்ணுங்களால முடியுதோ? என்று நீயம்
என்ன சொன்ன?? என்ன பத்தி பேசினா என்ன பத்தி மட்டும் பேசு ….
சும்மா பொண்ணுங்க கின்னுங்க நு பொதுப்படையா பேசாத….
உடனே வந்துடுவீங்களே போர் கொடி தூக்கிட்டு. சை
ஆமா உன்ன மாதிரி ஆணாதிக்க வாதிகளிடம் போர் கொடி பிடிக்காம வேற என்ன செய்றது. male chauvinist
ஆமாம்மா நாங்கலாம் male chauvinist  தான்.. இப்டி ஒரு male chauvinist  கூட ஏன் இருக்க? போக வேண்டியது தான.
அவ்வளவுதான். கண்களில் கோபம் பொங்க உன்னை பார்பேன்…. உன் பிடியில் இருந்து ஒவொரு விரல்களாய் பிரிந்து இப்பொழுது என் கை முழுதாய் விடுபடிருக்கும்.
கண்களில் குளம் கட்ட ஆரம்பிப்பதை நீ கவனித்ததும். அதில்ல அம்மு…. என்று மீண்டும் கைகளை இழுத்து உன் கன்னங்களில் வைத்துக்கொள்வாய்.நான் வேகமாக பின்னுக்கு இழுக்க முயற்சிப்பேன்.
ஒரு முறை இப்படி செய்யும் போது நான்  முரண்டு பிடித்து கண்ணாடி வளையல்கள் உடைந்து கைகளை கீறி அதற்கு அடுத்த சண்டை ஆரம்பித்ததில் இருந்து அவ்வளவு அடம்பிடிப்பதில்லை…
கடைசியில் கைகளை கன்னத்தில் இருந்து எடுத்து ஒவொரு விரல்களாய் முத்தமிட்டு. என் முகத்தை கைகளில் ஏந்தி sorry டா மன்னிச்சுடு என்று (தவறு என் பக்கமே இருந்தாலும்) மன்னிப்பு கேட்டு கைகோர்த்து நடக்கும் போது முடியும் அந்த நாடகம்…
திரும்பத்திரும்ப அரங்கேறினாலும் சலிக்காத நாடகம்.

No comments:

Post a Comment